Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காவலை செப்.30 வரை நீட்டியுங்கள்”….. ப.சிதம்பரம் தரப்பு எதிர்ப்பு….!!

ப.சிதம்பரத்திற்கு காவலை செப்டம்பர் 30_ஆம் தேதி வரை நீடிக்க வேண்டுமென்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார். பின்னர் நீதிபதி முன்பு ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதில் ப.சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்க கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். இதற்க்கு ப.சிதம்பரம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Categories

Tech |