ஜனவரி 10-ஆம் தேதி வரை அவருக்கான வருமானவரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளது.
2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 2019-20 ஆம் ஆண்டுக்கான தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அதன்படி தனி நபர் வருமான வரி கணக்கை ஜனவரி 10ஆம் தேதி 2021ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அவர்களுடைய கணக்கு தணிக்கை செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.