பயிர்க்கடன் செலுத்த 3 மாதம் காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 IAS அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தமிழக முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் பல்வேறு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் கூட்டுறவு நிறுவனங்களில் பயிர் கடன் பெற்ற விவசாயிகள் தங்களுடைய தவணைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கபட்டுள்ளது.மேலும் கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்கடன் வாங்கியவர்கள் தவணைத் தொகை செலுத்த கால அவகாசம் என்பது மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.