பிலிப்பைன்ஸ் குறிப்பிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத்தடையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் தொற்று அதிகம் இருப்பதால் பல நாடுகளும் போக்குவரத்திற்கு தடை அறிவித்தது. மேலும் இந்திய பயணிகள், தங்கள் நாட்டிற்குள் வரவும் தடை அறிவித்தது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீடிப்பதாக அறிவித்திருக்கிறது.
மேலும் குறிப்பிட்ட இந்த நாடுகளுக்கு கடந்த இருவாரங்களில் பயணம் செய்த பிற நாட்டு மக்களும் பிலிப்பைன்ஸ் வருவதற்கு தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மூன்றாவது தடவையாக இத்தடையை நீடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.