தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்தொற்று நிலையை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பல்வேறு முக்கிய புது விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் கல்லூரிகள், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப் படுமா என்ற பல கேள்விகள் இருந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று காலை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை அடிப்படையில், எதிர்வரும் காலங்களிலும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் கொரோனா தொற்று பரவும் என்பதை கருத்தில் கொண்டும், நோய் தொற்று பரவலை கண்காணித்து தொடர்ந்து, கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவசியமாகிறது. அதனடிப்படையில் அக்டோபர் 31-ஆம் தேதி வரைக்கும், காலை 6 மணி வரைக்கும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
மேலும் சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், குடமுலக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக பெருமளவில் மக்கள் ஒன்று கூட கூடிய நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமையில் இருந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற அனுமதி வழங்கப் படுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதேபோல 1ஆம் முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடத்துவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.