Categories
தேசிய செய்திகள்

3_ஆவது முறையாக கைது நீட்டிப்பு…. நாளை மீண்டும் விசாரணை…!!

ப.சிதம்பரத்துக்கு 3-ஆவது முறையாக கைது தடை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கான முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று  நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு  நடைபெற்றது.கடந்த இரண்டு நாட்களாக சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களாக அபிஷேக் மனு சிங்வி , கபில் சிபில் வாதங்களை முன்வைத்த நிலையில் மதியம் 2 மணியிலிருந்து அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார்.

அப்போது இந்த வழக்கு என்பது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை,  வேட்டையாடப்படும் கிடையாது. வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் நாங்கள் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருக்கிறோம் என்று கூறினார்.அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நேரங்களில் நீதிமன்றம் தலையிட்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பினை வழங்கி விட்டால் அது வழக்கின் திசையை மாற்றி விடும் என்று கூறினார். மேலும் எனக்கு இன்னும் அரை மணி நேரம் வாதிட வேண்டும். எனவே நாளைய தினம் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற  கோரிக்கையை சிபிஐ தரப்பில் ஆஜரான  துஷார் மேத்தா வைத்தநிலையில் உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை நாளை காலை 11 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தது. இதோடு ப.சிதம்பற்றத்துக்கான கைது தடையை மூன்று முறை உச்சநீதிமன்றம் நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |