Categories
உலக செய்திகள்

சுகாதார பாஸ் நடைமுறை நீட்டிப்பு… அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

பிரான்சில் அடுத்த ஆண்டு வரை சுகாதார பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்திருந்தாலும் வரும் காலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் குளிர்காலங்களில் அதிகரிக்கும். எனவே வருகின்ற 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை சுகாதார பாஸ் நடைமுறை நீடிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரான்சில் திடீரென சுகாதார நிலைமை மோசமடைந்தால் சுகாதார அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் சுகாதார பாஸ் நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து அறிவிப்பு ஆணைகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதார பாஸ் நடைமுறையை வருகின்ற 2022-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அரசு ஊடக பேச்சாளர் கேப்ரியல் அத்தால் கூறியுள்ளார்.

Categories

Tech |