Categories
தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை இயக்குனரின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பதவியான அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவர் டெல்லி வருமான வரித்துறையின் தலைமை கமிஷனராக பணியாற்றி வந்தார். கடந்த வருடம் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி முடிவடைந்த நிலையில், நவம்பர் மாதம் வரை ஒரு வருடத்திற்கு பதவி நீட்டிப்பு செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறை இயக்குனரின் பதவியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் கேபினட் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலத்தை 2 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக நீட்டிக்கும் மசோதா கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |