Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…. மாணவர்கள், பெற்றோர்களுக்கு அறிவிப்பு …!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர எழுந்துள்ளது. கல்வியாளர்கள் இதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து நீண்ட விவாதம் நடத்தினர். இருந்தாலும் மத்திய அரசு இதனை அமல்படுத்துவதில் குறியாக உள்ளது. அதற்கு முன்னோட்டமாக மக்களிடம் கருத்து கேட்டு தான் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்த மத்திய அரசு அதற்கான இணையத்தையும் வெளியிட்டது.

புதிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் கருத்துதெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18ம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிவடையும் நிலையில் அக்டோபர் 31-ம் தேதி வரை பல்கலைக்கழக மானியக்குழு கருத்து கேட்கும் காலத்தை நீடித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.https://innovateindia.mygov.in/nep2020/என்ற இணையத்தில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

Categories

Tech |