அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பரவிவரும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசும் தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. இந்த கல்வி ஆண்டுக்கான வேலை நாள் தொடர்ந்து தாமதமாகி வருவதால், கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தும், நீடித்தும் மாநில அரசு உத்தரவிட்டு வருகிறது.
அந்த வகையில் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனால் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் மேலும், அரசு பள்ளியில் சேர்க்கப்படும் மாணவருக்கு 14 வகையான பொருட்கள் வழங்கப்படுவதாலும், மாணவர் சேர்க்கை நடைபெறுவதாலும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.