Categories
கதைகள் தஞ்சாவூர் பல்சுவை மாநில செய்திகள்

இம்பூட்டு நுணுக்கமா….? மெர்சல் கலைஞர்கள்….. வியப்பூட்டும் உண்மை கதை….!!

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்களை பார்க்கும்போது அக்காலகட்டத்தில் நாம் பிறந்திருக்க கூடாதா என்ற அளவிற்கு நம்மை வியப்பில் பால் தெரிகிறது.

ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலில் பல சிவாலயங்கள் உள்ளன. முதலில் நுழையும் பொழுது கேரளாந்தன் திருவாசகம் என்ற ஒன்று உள்ளது. அதனை தொடர்ந்து  ராஜராஜன் திருவாயில் வரும். இந்த திருவாயில் திருசிற்றம் மாலையுடன் அமைந்துள்ளது.

மேலும் இதில் 24 சிற்றாலயங்கள் உள்ளன. இந்த இருபத்தி நான்கு சிற்றாலயங்களிலும்  உள்ள கடவுள்களை திசை கடவுள் என்று கூறுவர். அதன்படி வருணன், வாயு, இந்திரன் உள்ளிட்ட கடவுள்கள் திருச்சிற்றம் மாலையில் வைத்திருப்பார்கள்.

அதேபோன்று விநாயகருக்கும் முருகனுக்கும் திருச்சிற்றம்  மாலைகள் வைத்திருப்பார்கள். கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்பது போல நிறைய அழகான அமைப்புடன் அந்த கால சிற்பிகள் உருவாக்கியுள்ளனர். சிலையின் கை விரல்களில் இருக்கக்கூடிய நகங்கள் கூட தத்ரூபமாகக் செதுக்கப்பட்டு உள்ளன. அந்த கால சிற்பிகளின் திறமையை  என்னும் போது வியப்பை ஏற்படுத்துகிறது.

Categories

Tech |