Categories
மாநில செய்திகள்

எக்ஸ்ட்ராவா அரசு பேருந்து… அதுவும் 100% இருக்கைகளுடன்… வெளியான ஹேப்பி நியூஸ்..!!

தமிழகத்தில் பேருந்துகள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உடன் இயக்கப்பட்டு வந்த நிலையில் புதிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கபடாமல் இருந்து வந்தது. இதற்கிடையில் அவசர தேவைக்காக இ பாஸ் வசதி மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தன. இருப்பினும் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்ககால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில் பேருந்துகள் 60 சதவீத இருக்கைகளுடன் குறைவாகவே இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கும், பிற ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கும் குறைவான அரசு பேருந்துகளும், ஒரு சில தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவீத இருக்கைகளுடன் பயணிகள் பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிட்டு உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவீத இருக்கைகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |