தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 1000 ரொக்கப் பணம், முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் கூடுதலாக பொருட்களை சேர்க்க வேண்டும் அல்லது ரொக்க பணத்தை கூடுதலாக வழங்க வேண்டும் என்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சிபிஎம் கட்சியின் தலைவர் கே. பாலகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் போன்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
அதோடு பொங்கல் பரிசு தொகுப்பில் கட்டி வெல்லத்தை சேர்க்க வேண்டும் என்று விவசாயிகளும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பில் கூடுதல் பொருட்கள் அல்லது கூடுதல் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை கூடிய விரைவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது.