இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கையில் நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த குண்டு வெடிப்பினால் இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை , ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் , வேதாரண்யம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோர மாவட்ட பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகின்றது. வேதாரண்யம் கடற்கரை வழியாக இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாரேனும் நுழைகின்றார்களா ?என்றும் , சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா ? என்றும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.