Categories
உலக செய்திகள்

மிகவும் அபாய வெடி விபத்து… உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம்…செஞ்சிலுவை சங்கத்தினர் பதட்டம்.!

ஜெர்மனியில் கட்டிடம் ஒன்றில் எரிவாயு குழாய் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனில் இருக்கும் கட்டிடம் ஒன்றில் எரிவாயு குழாய் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த அந்த கட்டிடத்தில் செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் இருந்துள்ளனர்.கட்டிடம் முழுவதும் பயங்கரமாக சேதமடைந்தது. கட்டிடத்தில் இருந்த ஜன்னல் எல்லாம் நொறுங்கி காணப்படுகிறது. செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் 5 பேருக்கு விபத்தால் காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செஞ்சிலுவை சங்க அலுவலரான வில்ஹெல்ம் லெஹ்னர் கூறியதாவது, கட்டிடத்தில் திடீரென எரிவாயு குழாயினாள் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் கட்டிடம் முழுவதும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இவ்வளவு பெரிய எரிவாயு குழாய் வெடித்ததில் சிக்கிக் கொண்டிருந்த நாங்கள் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம் என்று கூறினார்.

Categories

Tech |