Categories
தேசிய செய்திகள்

கோதாவரியில் படகு கவிழ்ந்ததில் மிகுந்த வேதனை…. சோகத்தில் பிரதமர் மோடி..!!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஒரு படகு கவிழ்ந்ததில் மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில்  கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க 61 சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர்.

Image result for 13 killed in Godavari river

இதையடுத்து தகவலறிந்த இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று  மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.  உயிரிழந்தனர்.தொடர்ந்து காணாமல் போன 20 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

Image result for Extremely pained by the capsizing of a boat in Andhra Pradesh’s East Godavari.

உள்ளூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். இதனிடையே பலியான குடும்பத்தினருக்கு தலா 10,00,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Image result for மோடி

இந்நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் கவலை தெரிவித்துள்ளார். அதில்,  ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஒரு படகு கவிழ்ந்ததில் மிகுந்த வேதனை. என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. சோகம் நடந்த இடத்தில் தற்போது மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |