தன் மகன் விஜித் பச்சான் நடிக்கும் “டக்குமுக்கு திக்கு தாளம்” என்ற திரைப்படத்தை டைரக்டர் தங்கர்பச்சான் இயக்கி முடித்துள்ளார். இப்போது “கருமேகங்கள் கலைகின்றன” என்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கவுதம் மேனன் போன்றோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் அருவி படத்தில் நடித்த அதிதி பாலனும் இணைந்துள்ளார். அதாவது ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இதற்கு முன் தங்கர்பச்சான் இயக்கிய அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் ஆகிய படங்கள் வரிசையில் இந்த படமும் ஒரு அழுத்தமான கதையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.