தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை, தன் பசுமை கொஞ்சும் அழகால் ,சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.
மலை என்றாலே அழகுதான்.அதுவும் மரங்கள்,செடிகளால் பசுமை போர்த்தி காணப்பட்டால் சொல்லவே வேண்டாம். தேனி மாவட்டத்தில் சின்னமனூரில் உள்ளது மேகமலை. இது திரும்பும் இடமெல்லாம் பசுமை போர்த்தி அழகாய் உள்ளது .இது 34 கிலோ மீட்டர் தூரத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது .
இங்குள்ள இறைச்சல் பாறை அருவி மிகவும் அற்புதமாக உள்ளது .மேலும் மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளன .வட்டப்பாறை என்ற இடத்தில் யானையை அதன் குடும்பத்துடன் கண்டு ரசிக்கமுடியும். மேகமலையில் கொட்டிக்கிடக்கும் அழகை ரசிக்க வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.