8 அங்குல நீளம் வரை கண்ணிமைகளை கொண்ட சீனப் பெண் ஒருவர், 5 ஆண்டுகளுக்கு முன் செய்த தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
சீனாவில் வசித்துவரும் யூ ஜியாங்சியா என்ற பெண் 8 அங்குல நீளம் வரை கண்ணிமைகளை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு செய்த தன்னுடைய சொந்த சாதனையையும் முறியடித்துள்ளார். இதுகுறித்து ஜியாங்சியா கூறியதாவது, தனக்கு இவ்வளவு நீண்ட கண் இமைகள் எதற்காக உள்ளது என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.
ஆனால் நான் சில வருடங்களுக்கு முன்பு அதாவது கிட்டத்தட்ட 480 நாட்கள் மலைப்பகுதிகளில் வசித்து வந்தேன். ஆகையினால் இது நிச்சயமாக கடவுள் புத்தர் தந்த பரிசாக தான் இருக்கும் என்று கருதுகிறேன். மேலும் இந்த நீண்ட கண் இமைகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தான் தந்துள்ளது என்றுள்ளார். இதனையடுத்து நீண்ட கண் இமைகள் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தை வைரலாகி வருகிறது.