மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தேர்தல் ஆணைய கடிதத்திற்கும் முரண்பாடு இருக்கிறது. பெரும்பான்மையான நிதியை வைத்து மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் பெயர் வைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தை விரிவாக நடத்த மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புகள் கொண்டு வருவதற்காக அறிக்கை தராததால் ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்த முடியவில்லை. மகளிர் உரிமை தொகை வழங்குவதற்காக திரட்டப்பட்ட தகவல்களை ஆராயும் பணியில் அந்த குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை. ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது பிலாஸ்பூர் எய்ம்ஸ் மதுரை எய்ம்ஸ். ஆனால் ஒன்று திறக்கப்பட்டு விட்டது. ஒன்றுக்கு இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.