Categories
உலக செய்திகள்

நவீன எப்-35 லைட்னிங் போர் விமானங்கள்…. மீண்டும் அமீரகத்துடனான விற்பனை துவங்கும்…. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க துணை தூதர்….!!

அமெரிக்க துணைதூதர் பிலிப் பிரைன்  அமீரகத்துடனான ஆயுத விற்பனையை  அமெரிக்கா மீண்டும் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் அமீரகம் இடையேயான ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை பல ஆண்டுகளாக நல்ல முறையில் இயங்கி வருகிறது. இதனால் அமெரிக்கா எப்- 16 போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தண்டவாளங்கள் ஆகியவை ஆகியவற்றை அமீரகத்திற்கு விற்பனை செய்து வந்தது. இதனிடையே கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க செனட் சபை கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையேயான ஆயுத விற்பனை குறித்த ஒப்பந்தத்தை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் 49 க்கு 47 வாக்குகள் பெற்றதை தொடர்ந்து அமீரக ராணுவத்திற்கு நவீன எப்-35 லைட்னிங் 50 போர் விமானங்கள், 18 ரேப்டார் டிரோன் புதிய ரக ஆளில்லா குட்டி விமானங்கள், நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ தொழில்நுட்ப கருவிகளும் அனுப்பப்படும் எனக்கூறி நிறைவேற்றப்பட்டது. இதற்காக 2 ஆயிரத்து 300 கோடி அமெரிக்க டாலர் வழங்கப்படும் எனவும் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பதவியில் இருந்தபோது செய்து கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும் இராணுவ விவகாரங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமீரகம் விமானங்களை ஒப்படைப்பதை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆயுத விற்பனை விவகாரம் குறித்து துபாய் அமெரிக்க துணைத்தூதரகத்தில் துணைத்தூதர் பிலிப் பிரைன் கூறுகையில்  தற்போது ஜோ பைடன் அரசு அமீரகத்துடன் ஆயுத விற்பனையை விரும்புவதாகவும் தொடர்ந்து அமீரகத்திற்கு ஆயுத சப்ளை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |