Categories
மாநில செய்திகள் வானிலை

“பாணி புயல் எச்சரிக்கை “தமிழகத்திற்கு 309 கோடி ஒதுக்கீடு !!..

பாணி புயல் உருவானதை தொடர்ந்து   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு ரூபாய் 309 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள பாணி புயல், அதி வேகமாக வலுப்பெற்று நகர்ந்து கொண்டேஇருக்கிறது. இந்த புயலானது தர்ப்பொழுது ஒடிசா பகுதியின் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கின்ற சமயத்தில்  ஒடிசா பகுதியை தாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது , இதனையடுத்து பாணி புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு குறிப்பிட்ட உதவித்தொகையை ஒதுக்கிட  மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.இந்நிலையில், தமிழக மாநிலத்திற்கு 309 கோடி, ஆந்திர மாநிலத்திற்கு  200 கோடி, ஒடிசா மாநிலத்திற்கு 340 கோடி, மேற்கு வங்க மாநிலத்திற்கு 235 கோடியை ஒதுக்கிட மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

Categories

Tech |