Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முகநூலில்தான் தெரியும்… இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி விசாரணை…!!

முகநூலில் அறிமுகமான இளம்பெண்ணுக்கு கணவர் குழந்தைகள் இருப்பதை நேரில் கண்டதும் அதிர்ச்சி அடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பாலூர் பகுதியில் தனது கணவன் குழந்தைகளுடன் 25 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் சென்னையைச் சேர்ந்த பூபதி என்பவருடன் பேஸ்புக்கில் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இது காதலாக நாளடைவில் மாறியுள்ளது. ஆனால் பூபதிக்கு அந்தப் பெண் திருமணமானவர் என்பது தெரியாது. அந்தப் பெண்ணும் இதை மறைத்தே பூபதியுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென்று பூபதி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் வீட்டில் பெண்ணுடைய கணவர் குழந்தைகளை பார்த்த பூபதி மனமுடைந்து அப்பெண்ணின் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புதுப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூபதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |