டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை காலத்தை அந்நிறுவனம் நீட்டித்துள்ளது.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப் தன்னுடைய ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுள்ளார். அவருடைய சமூகவலைத்தள கருத்தால் ஆத்திரமடைந்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் கட்டத்திற்கு சென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ட்ரம்பினுடைய கணக்குகளை முடக்கியது.
இந்த வன்முறை சம்பவத்தை கருத்தில் கொண்டு ட்ரம்பின் டுவிட்டர் பக்கத்திற்கு அந்நிறுவனம் நிரந்தரமாக தடை விதித்தது. ஆனால் ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்திற்கு அந்நிறுவனம் தற்காலிக தடை விதித்த நிலையில், தற்போது 2 வருடங்கள் நீட்டித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு வரை ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்ரம்ப் கூறியதாவது, தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு செய்த அவமரியாதை என்று கூறியுள்ளார்.