Categories
மாநில செய்திகள்

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள்…. மெத்தை தயாரித்த சம்பவம்…. அதிர்ச்சியில் மகாராஷ்டிரா….!!

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை கொண்டு மெத்தை தயாரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சம்பா கிராமத்தில் உள்ள மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட முகங்களை கொண்டு மெத்தை தயாரிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக பருத்தி அல்லது பிற மூலப்பொருட்களைக் கொண்டு மெத்தை தயாரிப்பது என்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இந்த நிறுவனமானது பயன்படுத்தப்பட்ட முகங்களை சேகரித்து பின் அதனை மூலப் பொருளாக வைத்து மெத்தை தயாரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மெத்தை தயாரிப்பு உரிமையாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மெத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கு போலீசார் சென்று அங்கு தேக்கி வைக்கப்பட்டு இருந்த முக கவசங்களை தீயிட்டு அளித்துள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசு  திண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவ்வாறாக செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |