கொரோனா வைரஸை அழிக்கும் முகக்கவசம் கண்டுபிடித்துள்ளதாக சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது
சுவிட்சர்லாந்தை மையமாக வைத்துஜக் நகரில் இயங்கி வரும் லிவிங்கார்டு டெக்னாலஜி நிறுவனம் ஒன்று துணிகளில் கிருமி நீக்கம் செய்வதற்கு தாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொரோனா வைரஸை அளிப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே தொழில்நுட்பத்தை உபயோகித்து முக கவசங்களை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“முக கவசம் குறித்து கூறியபோது இந்து தொழில்நுட்பம் மாஸ் தயாரிக்கப்பட்ட துணியின் மேற்பரப்பில் ஒரு நேர்மறை மின்னோட்டத்தை உருவாக்குவதன் மூலமாக இயங்குகின்றது. எனவே கிருமிகள் முக கவசத்தின் மேற்பரப்பை தொடும்போது மின்னோட்டம் கிருமிகள் செல்லில் எதிர்மறை மின்னோட்டம் இருப்பதால் அவை அழிந்துவிடும். அதோடு இந்த தொழில்நுட்பம் முக கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கும் உதவி புரிகின்றது. சுமார் 210 முறை இந்த முக கவசங்களை மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தலாம்” என நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்