என்.ஜி.எம் மார்க்கெட்டிங் சார்பில் காவல்துறையினருக்கு முக கவசம், கை உறை, குளுக்கோன் டி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பொது மக்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹார்ஸ் சிங்கிடம் எம்.ஜி.எம் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் மரகதம் நமச்சிவாயம் என்பவர் முககவசம், கை உறை, குளுக்கோன் டி போன்றவற்றை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து இந்த பாதுகாப்பு பொருட்களை திருச்செந்தூர் கோட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது வ.உ.சி நற்பணி மன்ற நிறுவனத் தலைவர் இசக்கிமுத்து, நிறுவனத்தின் இயக்குனர் சதீஷ்,கார்த்தி போன்ற பலர் கலந்து கொண்டனர்.