அமெரிக்க தலைநகரான வாஷிங்டனின் நகர மேயர், வரும் 22- தேதியிலிருந்து, உள் அரங்குகளில் கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
வாஷிங்டனின் நகர மேயரான முரியல் பௌசர், கட்டாயமாக முகக்கவசம் அணியும் விதிமுறையிலிருந்து விலக்கு அறிவித்துள்ளார். ஆனால், உள்ளரங்கில் இருக்கும் மக்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப முகக்கவசத்தை அணிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில் பொதுப்போக்குவரத்து, பள்ளிகள், குடியிருப்பு வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை வழக்கம் போல் நடைமுறையில் இருக்கும் என்றும் மேயர் கூறியிருக்கிறார்.