இத்தாலி அரசானது கொரோனா குறைந்ததால் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் வரும் 28ம் தேதியிலிருந்து முகக்கவசம் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், நாட்டில், பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துவிட்டது. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை. எனினும் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது.
அந்தப் பகுதிகளுக்கு இந்த விலக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்தில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி விட்டதால் கொரோனா குறைந்தது. எனவே முகக்கவசம் தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. தற்போது இத்தாலியிலும் சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.