முகத்தில் இருக்கும் பருக்களை நீக்குவதற்காக மஞ்சள் கலவையை தயார் செய்து ஃபேஸ் பேக் போட்ட பெண்ணின் முகம் மஞ்சளாக மாறிய சோகம் ஸ்காட்லாந்தில் நிகழ்ந்துள்ளது.
ஸ்காட்லாந்தை சேர்ந்த லாரன் ரென்னி என்பவர் முகத்தில் உள்ள பருக்ககளை நீங்குவதற்காக யூடியூப் பார்த்து தேன், பாதாம், மஞ்சள் போன்ற பொருட்களை கொண்டு ஃபேஸ் பேக் தயார் செய்து அதை தன் முகத்தில் போட்டுக் கொண்டு சிறிது நேரத்தில் பருக்கள் மறைந்து அழகான முகமாக மாறிவிடும் என்று நினைத்து போஸ்ட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஆனால் வீடியோவில் எவ்வளவு நேரம் ஃபேஸ் பேக் போட வேண்டும் என்பதை சரியாக கவனிக்க மறந்த அவர் ஃபேஸ் பேக்கை எடுத்தபோது முகம் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் ஃபேஸ் வாஷ், சோப் போன்ற பொருட்களைக் கொண்டு முகத்தை கழுவியும் முகத்தில் உள்ள மஞ்சள் நிறம் போகாமல் அப்படியே இருந்துள்ளது. இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுமார் மூன்று வாரங்களாக இந்த மஞ்சள் முகத்தோடு நான் வீட்டிலேயே இருந்தேன். இது எனக்கு மிகவும் மோசமான அனுபவம் என்று கூறியுள்ளார்.