உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா? சருமத்தில் எண்ணெய் பசை இருக்கிறதா? இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வு உள்ளது இதோ அவற்றில் சில
முகத்தை கழுவவும்:
இது கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட நேரம் முகம் கழுவவில்லை எனில் முக சருமத்தில் எண்ணெய் பசை சேரும். தினசரி குறைந்தது இரண்டு முறை கிளிசரின் சோப்பு போட்டுக்கொண்டு முகத்தை கழுவ கூடாது.
தேன் தடவவும்:
சரும பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை நிவாரணி தேன். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமிநாசினி பண்புகள், எண்ணெய் பசையுள்ள சருமத்துக்கு தீர்வளிக்கும். இதற்கு தேனை முகத்தில் மெல்லிய படலமாக பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
பளிச்சிட வைக்கும் கற்றாழை:
கற்றாழையில் கிருமிநாசினி மற்றும் எண்ணெய் உரியும் தன்மைகள் உள்ளது. இது சருமத்தின் பளபளப்பைக் கூட்டும். முகம் மற்றும் கழுத்தில் கற்றாழை ஜெல்லை பூசி 10 முதல் 15 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் முகத்தை கழுவவும்.
தக்காளி:
தக்காளியில் நிறைந்திருக்கும் விட்டமின் சி சத்து சருமத்தில் எண்ணெய் சுரக்கும் சுரப்பை குறைகிறது. தக்காளியை பாதியாக வெட்டி வட்ட வடிவில் முகத்தில் தேய்க்க வேண்டும் அப்படியே 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
கிரீன் டீ :
கிரீன் டீயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் பாலி பீனால் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். அலர்ஜியை குறைக்கின்றன. ஒரு கப் நீரில் கிரீன் டீ இலைகளை போட்டு கொதிக்க வைத்து பின் அந்த நீரை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். உங்கள் முகத்தில் அவ்வப்போது ஸ்பிரே செய்து கொள்ளவும்..
பாதாம்:
முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கவும், அதிகப்படியான எண்ணெய் பசையை உரியவும் பாதாம் பருப்பு நல்ல தீர்வளிக்கும். 3 தேக்கரண்டி பொடியுடன் 2 தேக்கரண்டி தேன் கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் பூசவும். 15 நிமிடத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.
சரும எண்ணெய் பசைக்கு காரணம்
மரபியல் பாரம்பரியம்
அழகு சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்துதல்
ஹார்மோன் மாற்றங்கள்
உணவு பழக்கம்
மது அருந்துதல்
நீர்சத்து குறைதல்