Categories
டெக்னாலஜி

ரேஷன் கார்டில் உள்ள முகவரியை மாற்ற வேண்டுமா…? ஆபீஸ்க்கு செல்ல வேண்டாம்… ஆன்லைனிலேயே மாற்றலாம்…!!!

வீட்டில் இருந்து கொண்டே உங்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற முடியும். அதற்கான வழிமுறைகளை பற்றி இதில் பார்ப்போம்.

ரேஷன் கார்டு என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது இருந்து வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருள்களை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளது. இதன்முலம் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை புலம்பெயர்ந்தவர்கள் வாங்கிப் பயனடைய முடியும்.

பிரதமர் மோடியின் டிஜிட்டல் கட்டமைப்பின் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டது. இந்த ரேஷன் கார்டு எந்த இடத்திலும், எந்த நாட்டிலும், எந்த பகுதியிலும் பயன்படுத்த முடியும் என்று மாற்றம் கொண்டுவந்தது. இருப்பினும் உங்கள் ரேஷன் கார்டில்  முகவரியை மாற்ற விரும்பினால் நீங்கள் ஆன்லைனில் அதை ஈஸியாக செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளை பற்றி இதில் பார்ப்போம்.

எப்படி மாற்றுவது:

முதலில் நீங்கள் www.pdsportal.nic.in என்ற லிங்க்கை கிளிக் செய்து இந்திய அரசின் அதிகாரப்பூர்வ PDS போர்ட்டல் குள் நுழைய வேண்டும். அதில் முகப்பு பக்கத்தில் ‘மாநில அரசு இணையதளங்கள் என்ற வசதியை கிளிக் செய்து  உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து அதில் ரேஷன்கார்டு முகவரி மாற்றம் அல்லது ரேஷன்கார்டு படிவத்தில் மாற்றம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அதில் உங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். உங்கள்  விவரங்களை சரியாக நிரப்பிய பின்பு submit என்பதை கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் முகவரி சில நாட்களில் மாற்றப்படும். பின்னர் நீங்கள் புதிய ரேசன் அட்டையை வாங்கி கொள்ளலாம்.

Categories

Tech |