ஹெல்த்தி ஜூஸ்
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் – 1
பீட்ரூட் – 1
கேரட் -1
நெல்லிக்காய் -1
இஞ்சி – சிறிய துண்டு
பேரீச்சை – 5
மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 ஸ்பூன்
பனங்கற்கண்டுத்தூள் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பீட்ரூட் மற்றும் இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பேரீச்சைமற்றும் நெல்லிக்காயின் விதைகளை நீக்கவும்.பின் நறுக்கிய ஆப்பிள், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், இஞ்சி , பேரீச்சை, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் பனங்கற்கண்டுத்தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்விட்டு மையாக அரைத்து வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் பருகி வர முகம் ஜொலிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி கூடும் .