ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஓசூரை அடுத்த கருப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் சதீஷ் ஆகியோர் ஓசூர் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பல்சர் பைக்கில் சென்றுள்ளனர். இதேபோல ராயக்கோட்டை நோக்கி முனிவர்மன் என்பவருடன் சின்ன ரத்தினம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் வளைவில் வாகனத்தை இரு திறப்பினரும் வேகமாக திருப்பியதில் எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதின. இதில் வாகனங்களை ஓட்டி வந்த தமிழரசன், சின்ன ரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்புறம் அமைந்திருந்த சதீஷ்க்கு கால் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையிலும் முனிவர்மன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை காண உறவினர்கள் கதறி அழுதது ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.