தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோகேல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் ஒரு வார கொண்டாட்டமாக நடைபெற்றது. அதன்பிறகு நடிகை ஹன்சிகாவின் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது.
View this post on Instagram
இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய கணவருடன் சேர்ந்து பொது இடத்துக்கு சென்றுள்ளார். அப்போது நடிகை ஹன்சிகாவிடம் பத்திரிகையாளர்கள் ஹனிமூன் பற்றி கேட்க அவர் வெட்கத்தில் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ள நிலையில், ஷூட்டிங் இருப்பதால் தற்போது ஹனிமூன் செல்வதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
View this post on Instagram