Categories
Tech

Facebook பயனாளர்கள் முக்கிய அறிவிப்பு…. டிசம்பர் 1 முதல் இது இருக்காது…. புதிய அப்டேட்….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் facebook பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் பயனர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய முடியும். இந்நிறுவனம் தனது பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது. பேஸ்புக் செயலியில் ஊடுருவிய ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பேஸ்புக் கடவுச்சொல்லை பிற மொபைல் செயலிகளில் பதிவு செய்ய வேண்டாம் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது பயனர்கள் தங்களின் தேவையற்ற தகவல்களை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதாவது பயனர்கள் தங்களின் கணக்கை தொடங்குவதற்கு நீண்ட படிவத்தை நிரப்பிய பிறகு தான் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது இதில் religious view, political views and address உள்ளிட்ட தகவல்களை அகற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தகவல்களை பயனாளர்களின் பக்கத்திலிருந்து நீக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த தகவல்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கு அகற்றுமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |