Categories
உலக செய்திகள்

உலக நாடுகளின் கண்டனம்… முடக்கப்பட்ட ராணுவ கணக்குகள்… பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு…!!

பேஸ்புக் நிறுவனம் மியான்மரில் உள்ள ராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும் முடக்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 1 ஆம் தேதி மியான்மரில் புதிய நாடாளுமன்றம் கூட இருந்த போது, ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவி ஆங் சான் சூ கீ போன்ற தலைவர்களை விடுவிக்கக் கோரியும், ராணுவ ஆட்சியை எதிர்த்து மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இதனை ராணுவம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பேஸ்புக் மியான்மரில் ராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும், ராணுவ கட்டுப்பாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களையும் தடை செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் கூறும்போது, மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பு பிந்தைய நிலைமையை அவசர நிலைமையாக பார்ப்பதாகவும், அங்கு நடைபெறும் கொடிய வன்முறை நிகழ்வுகளால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் பேஸ்புக் நிறுவனம் மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எம் ஆர் டி வி அரசு டிவி சேனல் மற்றும் மியாவடி டெலிவிஷன் சேனல் இரண்டின் கணக்குகளையும் முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இன்ஸ்டாகிராமிலும் பேஸ்புக் ராணுவ கணக்குகளை முடக்கி விட்டது.

Categories

Tech |