அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை நடைபெற்றதையடுத்து டிரம்பின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அந்தந்த நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது.
அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்ததையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பலரும் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே முன்னாள் ஜனாதிபதியான டிரம்ப் வன்முறை ஆரம்பிப்பதற்கு முன்பும் பின்பும் சமூக வலைத்தளங்களில் தேர்தலில் நடந்த முறைகேடு குறித்த பதிவுகளை வெளியிட்டார்.
இதனால் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் டிரம்ப் வன்முறையை தூண்டுவதாக கூறி அவருடைய அதிகாரப்பூர்வ கணக்குகளை தற்காலிகமாக முடக்கியது. அதன்பின் யூடியூப், ட்விட்டர் நிறுவனங்கள் முன்னாள் ஜனாதிபதியான டிரம்பின் கணக்கிற்கு நிரந்தர தடையை அறிவித்தது.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் டிரம்பின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு 2 ஆண்டுகள் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ட்ரம்பின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள் 2023ஆம் ஆண்டு வரை முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பேஸ்புக்கின் இந்த அதிரடி உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப் கூறியதாவது, தனக்கு வாக்களித்த 71/2 கோடி மக்களுக்கு செய்த அவமரியாதை என்று தெரிவித்துள்ளார்.