TIK -TOK போன்றே BARS என்ற செயலியை பயனர்களுக்காக பேஸ்புக்கின் R&D குழு வடிவமைத்துள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசு TIK -TOK போன்ற 43 சீன செயலிகளை தடை செய்தது. இதனால் சீன நிறுவனமான TIK TOK – கிற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த நிறுவனம் இந்திய சந்தையில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் மத்திய அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாட்டினால் அது முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் facebook நிறுவனம் TIK -TOK இடத்தை நிரப்புவதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது . முயற்சின் வெற்றியாக BARS என்ற செயலியை facebook நிறுவனம் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
facebook -ன் R&D என்ற குழு BARS செயலியை வடிவமைத்துள்ளது. இந்த செயலி வீடியோவை பதிவேற்றும் செய்யும் பயனர்களுக்கென்றே தனி திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே “RAP” என்ற மியூசிக் upload செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் அதற்கு ஏற்றவாறு பயனர்கள் தங்கள் வரிகளை நிரப்பி திறமையை வெளிக்கொண்டு வரலாம். அமெரிக்காவில் மட்டுமே இந்த “BARS” செயலி தற்போது பயன்பாட்டில் உள்ளது.