Categories
உலக செய்திகள்

கைகோர்க்கும் ஜியோ – பேஸ்புக்: பயனடையப்போகும் சிறு, குறு தொழில்கள்!!

ஜியோ நிறுவனத்தின் 9.99 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான பேஸ்புக் 5.7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மிகப்பெரிய ஷேர் ஹோல்டர் என்ற பெருமையை பேஸ்புக் பெறுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் கூகுள்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக பேஸ்புக் நிறுவனம் தனது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் தொடங்க முயற்சித்து வருகிறது.

பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்ய இருக்கிறது என்ற தகவல் பிரிட்டனில் உள்ள ஒரு செய்தித்தாளில் வெளிவந்த பிறகு இந்த அறிவிப்பை பேஸ்புக் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஜியோவின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக பேஸ்புக் உருவெடுத்துள்ளதாகவும், இந்த கூட்டு முயற்சியால் இந்தியா டிஜிட்டல் சேவையில் மிகப் பெரிய தேசமாக இருக்கும் என்றும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி ரிலையன்ஸ் கூறுவதாவது, இதன்மூலம் அனைத்து வகை தொழில் செய்பவர்களும் பயனடைவார்கள். முக்கியமாக சிறு தொழில் செய்பவர்களுக்கு பெரிய வகையில் உதவி கிடைக்கும். இந்த சேவை வாயிலாக 60 மில்லியன் மைக்ரோ, சிறு மற்றும் மீடியம் அளவு தொழில்கள், 120 மில்லியன் விவசாயிகள், 30 மில்லியன் வியாபாரிகள் பயன் பெறுவார்கள் என அவர் கூறியுள்ளார். ஜியோவில், பேஸ்புக் முதலீடு செய்ய முக்கிய காரணம் இந்த ‘ஜியோ பிளாட்ஃபார்ம்’. இந்த சேவையை தங்களது வாட்ஸ்ஆப் செயலியோடு இணைக்கும் ஆர்வம் பேஸ்புக் நிறுவனத்திற்கு உள்ளது.

Categories

Tech |