ஃபேஸ்புக் நிறுவனம் தங்கள் செயலியில் பாடல் வீடியோக்களை கேட்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது
உலகளவில் பிரபல நிறுவனமான ஃபேஸ்புக் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தன்வசம் இருப்பதில் கவனம் செலுத்தும். அவ்வகையில் தற்போது புதிய அம்சமாக பாடல் வீடியோக்களை கேட்கும் வசதியை அந்நிறுவனம் தனது செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக இந்தியாவில் இருக்கும் பயனர்கள் ஜீ மியூசிக், டி சீரிஸ் மியூசிக் போன்ற நிறுவனங்களின் இசை வீடியோக்களை ஃபேஸ்புக் செயலியல் கண்டு ரசிக்க முடியும்.
டிஸ்கவர் டேப்பிள் இருக்கும் இந்த வசதியை பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் உபயோகிக்க முடியும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் கூறுகையில், “எங்கள் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு மிக அற்புதமான அனுபவத்தை கொடுப்பதற்காக இசைத்துறையில் பல நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து பணிபுரிந்து வருகிறோம். அதோடு எங்கள் தளத்தில் அதிகாரப்பூர்வ இசை வீடியோக்களை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
தனித்துவம் மிக்க புது புது வசதிகளை எங்கள் செயலியல் சேர்க்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ஃபேஸ்புக் மூலமாக மக்களை இணைக்கும் புதிய வழிகளையும் கொண்டுவருவோம்” என தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் இச்சேவையானது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக வெளியானது. இவர் யுனிவர்சல் மியூசிக், சோனி மியூசிக், கவர்னர் மியூசிக், கோபால்ட், பிஎம்ஜி போன்ற நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் இத்தகைய வசதிக்காக ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Now Playing: Music Videos on Facebook https://t.co/UXgXmcTTZ1
— Meta Newsroom (@MetaNewsroom) July 31, 2020