Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

போலீசுடன் பேஸ்புக் காதல்…. நம்பி சென்ற இளம்பெண்ணு…. வேலூரில் பரபரப்பு …!!

வேலூர் மத்திய சிறையில் காவலராக இருக்கும் ஒருவர் முகநூலில் விரித்த காதல் வலையில் சிக்கி தனது வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று காவல் நிலையம் படியேறி இருக்கின்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கநாரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். வேலூர் மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சென்னையை சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் உரையாடல்கள் காதலாக மாறி, இருவரும் கடந்த ஆண்டு நடந்த அத்திவரதர் தரிசனத்தின் போது நேரில் சந்தித்து உள்ளனர்.

அப்போது அந்த இளம்பெண்ணிடம் தனக்கே உரிய பாணியில் காதல் வார்த்தை பேசி அள்ளி வீசுகிறார் கணேஷ்குமார். தன் காதலனை நம்பி அந்த இளம் பெண்ணும் அவரின் அழைப்பை ஏற்று வேலூருக்கு செல்லவே, அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அத்துமீறி இருக்கிறார் சிறைக்காவலர். பின்னர் மயக்க நிலையில் ஆடைகளின்றி  இருந்த பெண்ணை, செல்போனில் படம் எடுத்து கொண்ட அவர்… அதை காட்டி மிரட்டியே பல முறை அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கூறவே தன் நிஜ முகத்தை காட்டி இருக்கிறார் சிறைக்காவலர். உன்னை போலவே பல பெண்  என் லிஸ்ட்டில் இருக்கிறார்கள் எனக் கூறி செல்போனை காட்டியுள்ளார். அதில் ஏராளமான பெண்களின் நிர்வாண போட்டோக்கள், வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார் அந்த பெண். இதனிடையே சிறைக்காவலருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கவே… அவரின் ஊருக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.

ஆனால் அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை விரட்டி அடிக்கவே… செய்வதறியாது திகைத்து போன அவர்,  காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது அவருக்கு. ஜெயில் வார்டன் எனக்கு போலீஸ் மட்டுமின்றி ரவுடிகளும் நிறைய பேரையும் தெரியும் என கூறியுள்ள சிறைக்காவலர் அவர்களை வைத்தே உன் கதையை முடித்து விடுவேன் எனக் கூறி மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இருந்தபோதிலும் தன்னைப்போல ஏமாற்றப்பட்ட பெண்களின்  பட்டியலை எல்லாம் சேகரித்துள்ளார் அந்தப் பெண். பெங்களூருவில் செவிலியர், ராணிப்பேட்டையில் கல்லூரி மாணவி என சிறைக் காவலர்களால் ஏமாற்றப்பட்ட பெண்களின் பட்டியலை சேகரித்த அந்தப் பெண் அதையெல்லாம் ஆதாரமாக மாற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  இவர்கள் எல்லோருமே பேஸ்புக் மூலமாக பழகி இருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பணக்கார வீட்டுப் பெண்ணை ஏமாற்றி பணம் பறித்து, உல்லாச வாழ்க்கையிலும் சிறை காவலர் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால் அதிர்ந்து போன போலீசார் சிறை காவலர் கணேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவான அவரை தேடும் பணி நடைபெற்று வந்தபோதிலும் இந்த விவகாரம் சிறைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வேலூரில் இருந்து வந்தவாசிக்கு அவரை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அவர் பணிக்கு வராததால் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை ?

வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறைக்காவல் இந்த செயலால் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |