மக்கள் அனைவரும் விரும்பி பயன்படுத்திவரும் முகநூல் செயலியை ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உலக நாடு முழுவதும் பல பில்லியன் மக்கள் பயன்படுத்தி வரும் முகநூல் குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முகநூல் செயலியை பயன் படுத்துவதற்கு முன்பு பயனாளர்கள் குறித்த விவரங்கள் கேட்பது வழக்கம் அதில் சில விவரங்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இஸ்ரேலின் சைபர் கிரைம் உளவு நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆலன் கால் உறுதி செய்துள்ளார்.
ஃபேஸ்புக் பயன்படுத்திவரும் 50 கோடி பயனாளர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியாகி இருப்பதாக கூறியுள்ளார். இதில் இந்தியாவை சேர்ந்த 61 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் வெளியாகி இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் பயனாளர்கள் குறித்த முழு பெயர் முகவரி போன் நம்பர் ஈமெயில் முகவரி திருமணமானவரா இல்லையா போன்ற தகவல்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர் .
இவை சார்பான தகவல்கள் அனைத்தும் கடந்த ஜனவரி மாதம் முதலே ஆன்லைனில் வெளியாகி இருப்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதனால் பேஸ்புக் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்து கலக்கத்தில் உள்ளனர். இவ்வாறு வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையா என்று ஆலன் பாலும் பிசினஸ் இன்டஸ்ட்ரியல் நிறுவனமும் சேர்ந்து பரிசோதனை செய்தபோது வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்று அறிவித்துள்ளனர்.
இதனை பேஸ்புக் நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. இது போன்ற பொய்யான தகவல்கள் எப்போதும் வெளியாகி வருவதாகவும் இப்போது வெளியிட்டுள்ள தகவலும் பழையவை 2019 யில் கசிந்ததாவும் அதற்குத் தீர்வும் அளிக்கபட்டுவிட்டது என்று ஃபேஸ்புக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.