சமூக ஊடகங்களில் உள்ள தலீபான்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. அவர்கள் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை கடுமையாக விதிப்பார்கள் என்பதற்காக ஆப்கான் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். மேலும் சிலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். குறிப்பாக சில நாட்களாகவே தலீபான்கள் குறித்த செய்திகளானது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்த அமைப்பின் முகநூல் கணக்குகள் நேற்று முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முகநூல் நிறுவனம் கூறியதாவது ” தலீபான் ஒரு தீவிரவாத இயக்கம். எங்கள் நிறுவனத்தின் ஆபத்தான அமைப்புகளின் பட்டியலின் கீழ் உள்ளது. அவர்களை ஊக்கப்படுத்தும் கருத்துகளை நாங்கள் தடை செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளது. இதனை தொடர்ந்து வாட்ஸ் ஆப் நிறுவனமும் தலீபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரது கணக்குகளும் முடக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.