இஸ்ரேலில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால், பொது மக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் 16 வயதுக்கு அதிகமான நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 16 வயதிற்கு அதிகமான 81% மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அங்கு பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்நிலையில் இஸ்ரேலில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. எனவே பொது வெளிகளில் இருக்கும் உள்ளரங்குகளில் பொதுமக்கள் இனிமேல் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இஸ்ரேல் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.