Categories
உலக செய்திகள்

உண்மை என்ன…? “கொரோனா பரவல்” இதுதான் காரணம்….. ஆதாரத்துடன் வெளியான உண்மை….!!

கொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று என பெருந்தொற்று நிபுணர் அன்டோனி பௌசி ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளார். 

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த  வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வௌவால்கள்  மூலம் வேறு விலங்கிற்கு பரவி  அதன் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும், இது சீனாவின் ஹுக்கான்  நகரில் உள்ள விலங்கு சந்தை மூலமாக மனிதர்களிடையே பரவியதாகவும் கணிப்பில் கூறப்பட்டு  வந்தன. 

ஆனால் இந்த கொரோனா வைரஸ் ஹூகான் மாகாணத்தில் உள்ள தீநுண்மியல்  ஆய்வுக் கூடத்திலிருந்து பரவியதாகவும் அதற்கான  ஆதாரம் என்னிடம்  இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இந்நிலையில் டிரம்பின் வாதத்தை முன்வைத்து, முன்னணி பெருந்தொற்று நிபுணரும், NIAID அமைப்பின் இயக்குனருமான அன்டோனி பௌசி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வௌவால்களின்   உடல்களில் உருவாகும்  வைரஸ்களின்  பரிமாணத்தை பார்க்கும்போது இந்த கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் வடிவமைக்கப்படுவதற்கு  வாய்ப்பே இல்லை என்றும், இந்த கொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று, இதற்கு ஆதாரமாக ஏராளமான பரிணாம வளர்ச்சியை  உயிரியலாளர்கள் உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வைரஸின் தாக்கம் எத்தனை ஆண்டு காலம் உலகில்  நீடிக்கும் என்று கேட்ட கேள்விக்கு, அதுகுறித்து  இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது  என்று தெரிவித்துள்ளார். 

Categories

Tech |