உயரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் லலித்ஓரான். இவர் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில் ஏழடி உயரமுள்ள எந்திரத்தில் ஏறி நின்று சுத்தம் செய்யும் பணியைமேற்கொண்டுள்ளார். அப்போது அவருடைய கால் இடறி கீழே விழுந்தார்.
இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை உடன் பணிபுரியும் தொழிலாளர்களால் மீட்கப்பட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.