நடிகர் தல அஜித் குமார் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மை தகவல்கள் பற்றிய தொகுப்பு
- நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன் டூவீலர் மெக்கானிகாக இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஈரோட்டில் உள்ள ரெங்கா கார்மெண்ட்ஸ் என்ற துணிக் கடையில் சேல்ஸ்மேனாக இருந்தார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு உண்மை.
- அஜித்தின் கூட பிறந்த இரண்டு சகோதரர்களும் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு சென்ற போதிலும் தன் பள்ளிப் படிப்பை பத்தாம் வகுப்பைக் கூட முடிக்காமல் பாதியிலேயே வெளியேதற்கு படிப்பை விட மற்ற துறைகளில் இவருக்கு இருந்த ஆர்வமே காரணம் என்றும் கூறப்படுகிறது.
- அஜித்தின் முதல் படமான பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படம் கடைசி வரை திரைக்கு வராமல் போனதற்கு அந்தப் படத்தின் இயக்குனர் திருவாசனின் மரணமே காரணமாக அமைந்தது.
- அஜித் குமார் தனது உடலில் 15க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்துள்ள போதும் இன்னும் தனது படங்களில் டூப் போடாமலே சண்டைக் காட்சிகளில் நடிக்கிறார் என்பது அவரது தொழிலில் அவர் எத்தனை நேர்மையாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது.
- அஜித்குமார் தமிழில் அறிமுகமான போது இவருக்கு தமிழில் சரியாக வராததால் அமராவதி பாசமலர்கள் போன்ற படங்களுக்கு நடிகர் விக்ரம் தான் டப்பிங் பேசினார் என்பது சுவாரசியமான ஒரு உண்மை.
- விமானம் ஓட்டுவதற்கு தேவையான பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே இந்திய நடிகர் மட்டுமல்ல இவர் இந்தியாவின் மிகச் சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர் என்று நினைக்கும் போது இவரின் பன்முகத் திறமையை நினைத்து நாம் பெருமிதம் கொள்ளலாம்.
- அஜித்தின் இரண்டு சகோதரர்களும் அமெரிக்காவில் நல்ல நிலையில் இருக்கும் அதேநேரம் இவரின் இரண்டு சகோதரிகளும் தனது இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவியது மிகப் பெரிய துரதிஷ்டம் தான்.
- புகைப்படங்களின் மீதுள்ள ஆர்வத்தால் தனது வீட்டிலேயே போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ள அனைவரும் ரசிக்கும்படியான ஏராளமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.
- தன்னுடன் பழகும் அனைவரும் நன்றாக உடையணிந்து நகங்களை வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பும் நல்ல மனம் படைத்தவர் இவர்.
- சமையல் கலையில் ஆர்வமுள்ளவர் அஜித் பலவகையான உணவுகளை சமைத்து இருந்தாலும் இவர் சமைக்கும் பிரியாணிக்கு ரசிகர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக நடிகை திரிஷா இவரின் பிரியாணிக்கு அடிமை என்பது சுவாரசியமான ஒரு உண்மை.
- ரஜினியின் ரசிகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித் குமார் இன்று அவருக்கு நிகரான ஒரு இடத்தை பிடித்து விட்ட போதிலும் இன்றும் தான் ஒரு ரஜினி ரசிகன் தான் என்ற உண்மையை மறைக்காமல் சொல்லும் உயர்ந்த மனிதர்.
- இவர் கலைமாமணி, புகைப்படக் கலைஞர், பைக் ரேஸர், விமான ஓட்டுநர், சமையல் கலை வல்லுநர் என பன்முகத் தன்மையின் ஒட்டு மொத்த உருவமாகவே தெரிகிறார் இந்த தல அஜித் குமார்.