Categories
பல்சுவை

காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்…. பலரும் அறியாத தகவல்கள்….!!

  • பண்டிதர்களின் மடியில் தவழ்ந்த தமிழ் கவிதைகள் கண்ணதாசனின் வரிகளால் பாமரனின் வீட்டிற்கும் சென்று விளையாடியது.
  • ‘கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நினைவாகும்’ என்ற பாடலை கண்ணதாசனின் முதல் திரைப்பாடல்.
  • காயங்களுக்கு மருந்தாய், காதலை வெளிப்படுத்த வார்த்தையாய், மௌனத்தின் சத்தமாய், ஆனந்தக் கண்ணீராய், தனிமையின் கதறலை அமைந்தன இவர் திரைப்பாடல்கள்.

  • இன்றைய பல காதல் திரைப்படங்களின் தலைப்புகளாய் மாறியது கண்ணதாசனின் பாடல்வரிகள்.
  • ஆரம்பத்தில் நாத்திகனாக இருந்த கண்ணதாசன் விமர்சனம் செய்வதற்காக கம்பராமாயணத்தை படிக்கத் துவங்கி அதில் லயித்துப் போய் கடவுளை ஆராயத் தொடங்கினார்.
  • பாடல் எழுதும் ஊக்கத்தை கம்பராமாயணத்தில் இருந்து தான் பெற்றதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
  • தமிழில் பல வார்த்தைகளுக்கு தனி கௌரவம் கொடுத்தவர் கண்ணதாசன்.

  • ‘கண்ணே கலைமானே’ என்ற பாடலே கவிஞரின் கடைசி வரிகள் என பலரும் எண்ணுகிறார்கள் ஆனால் ‘தேவன் தந்த வீணை’ பாடலே அவருடைய கடைசி பாடல் வரிகள்.
  • ‘இசையினிலே எனை மறந்தேன், இறைவன் சபையில் கலைஞன் நான்’ என்று அந்தப் பாடலில் தனது கடைசிப் பாடல் வரிகளை எழுதி முடித்தபோது திரை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
  • கவிதை வரிகளை எழுதும் போதும் சொல்லும் போதும் தனது காலணிகளை கழற்றி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் கவிஞர் கண்ணதாசன்.

  • தான் மரணம் அடைந்துவிட்டதாக இவரே செய்தியை பரப்பிவிட்டு, பின்னர் சிரித்தபடி அனைவரது முன்பும் தோன்றினார். அக்டோபர் 17 1981 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்த சமயம் மறுபடியும் அதே நிகழ்வு நடக்காதா என்று அனைவரும் எண்ணினர்.
  • திரையுலக கம்பனாய், தமிழை மேலும் அழகாக்கி, காலத்தை வென்ற கவிஞனாய் இருக்கும் கண்ணதாசன் ஒரு தமிழ் காவியம் என்றே கூறலாம்.
  • தமிழர்களின் உணர்வுகளிலும் கனவுகளிலும் இன்றளவும் கலந்து இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

Categories

Tech |