Categories
பல்சுவை

சுந்தர் பிச்சை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்…!!

  • இரண்டு அறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வளர்ந்த இவரது வீட்டில் தொலைக்காட்சி கூட கிடையாது
  • படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் காட்டிய சுந்தர் பிச்சை பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கினார்.
  • இவர் மிகவும் எளிதாக தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அபாரத் திறமை படைத்தவர்.
  • 2008ம் ஆண்டு சுந்தர் பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது.
  • கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்தது.

  • ஆண்ட்ராய்ட் இயங்கு தளங்களான ஜெல்லிபீன் கிட்கேட் மற்றும் லாலிபாப் போன்றவற்றின் வடிவமைப்பில் இவரின் பங்களிப்பு சிறப்பான ஒன்றாக இருந்தது.
  • இவரது ஆண்டு வருமானம் இந்திய ரூபாயின் மதிப்பு 301 கோடி.
  • இவரது தலைமை பண்பு, சிறந்த மேலாண்மை மற்றும் மற்றவர்களுடன் பழகும் விதம் போன்ற காரணங்களினால் ஊழியர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
  • அமெரிக்க தொழில்நுட்பத்துறையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள சத்திய நாதல்லாவுக்கு பிறகு மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை இந்த நிலையை அடைந்துள்ளார்.
  • மைக்ரோசாஃப்ட் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் இருந்து பல்வேறு அழைப்புகள் வந்தாலும் நிராகரித்துவிட்டு கூகுளில் தனது பணியை தொடர்கிறார்.
  • ஐஐடியில் தன்னுடன் படித்த கெமிக்கல் என்ஜினீயர் அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Categories

Tech |